முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில்!(Photos)
எதிர்வரும் பருவபெயர்ச்சி மழை காரணமாக நேரிடும் இடர்பாடுகளை எதிர்க்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வர குமார் தெரிவித்துள்ளார்.
பருவபெயர்ச்சி மழை
துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்று(02.11.2022) இடம்பெற்ற பருவபெயர்ச்சி மழை காரணமாக நேரிடும் இடர்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில்
மேலும் அவர் தெரிவிக்கையில்,“துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 35 இடைத்தங்கல் முகாம்களும், மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் ஆயத்த நிலையில் இருக்கின்றன.
இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படும் நிலையில் மக்களை பாதுகாப்பாக கொண்டுவந்து தங்க வைக்கின்ற அனைத்து ஏற்பாடுகளும் அனேகமாக நிறைவடைந்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில்,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவகர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள்
,சுகாதார வைத்திய அதிகாரி,கால் நடை வைத்திய அதிகாரி, நீர்பாசன பொறியியலாளர்
,பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ,இராணுவ பொறுப்பதிகாரிகள் பிரதேச சபையினர் என
பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
