இலங்கையில் அதிகரிக்கப்போகும் வட்டி விகிதம்..! ஏற்படப்போகும் நேரடி விளைவு - சபையில் எச்சரிக்கை
எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.5% அல்லது 1% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.05.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..
அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
சந்தைக் கொள்கை
நிதி அமைச்சகம், மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவை சந்தைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இல்லையெனில், இந்தத் தீய சுழற்சி தொடர்ந்து நீடிக்கக்கூடும். அரசியல் மேடையில் எவ்வளவுதான் பேசப்பட்டாலும், அது பயனற்றது; சந்தை அரசாங்கத்தை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.