கடும் பொருளாதார நெருக்கடி! இங்கிலாந்து வங்கியினால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிப்பு
இங்கிலாந்து வங்கியினால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது அதிகரித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட வீதம் 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
14 ஆண்டுகளில் இல்லாதளவு வட்டி விகிதம் உயர்வு
2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒன்பதாவது முறையான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த வீதம் 14 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வங்கி அதன் தரப்படுத்தப்பட்ட வீதத்தை 2.25 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளதுடன், இது 1989ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒற்றை அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த வட்டி விகித உயர்வு பிரித்தானியா முழுவதும் சேமிப்பவர்களுக்கு சிறந்த வருமானமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.