விசுவமடு மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு
விசுவமடு கிராம மக்களுக்கான 50,000 ரூபா வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(1) விசுவமடு கிழக்கு அட்டைக்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றிருந்தது.
பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த மக்களை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கோடு நிலம் இருந்தும் வளம் இல்லாத மக்களை வளப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயம், பயிர்ச்செய்கை செய்யும் 19 பயனாளிகளுக்கு தலா 50,000 ரூபா விகிதம் வட்டி இல்லா கடனாக 950,000 ரூபா இன்றையதினம் (01) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வட்டியில்லா கடன்
விசுவமடு கிழக்கு, மேற்கு பகுதிகளில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசுவமடு கிராம மக்களுக்கு சுழற்சி முறையில் வட்டி இல்லா கடன் வழங்கப்பட இருக்கின்றது.
அத்தோடு பாடசாலை மாணவர்கள், முதியோர்கள், விவசாயிகளுக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரின் நெறிப்படுத்தலுடன் விசுவமடு கிராம மக்களின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விசுவமடு கிழக்கு கிராமசேவையாளர் வி. கோணேஸ்வரன், திட்ட இணைப்பாளர் தீ. அனுஸ்ரியா, பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.









