புதிய கல்வி சீர்திருத்தம்: பல்கலை மாணவர் ஒன்றியம் விடுக்கும் எச்சரிக்கை
புதிய கல்வி சீர்திருத்தங்கள் இலங்கையின் இலவசக் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வித் துறையிலிருந்து ஓரங்கட்டப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தோற்கடிக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஏற்படப்போகும் பாதிப்பு
விசேட அறிக்கையை வெளியிட்ட IUSF, தேசிய மக்கள் சக்தியின் கீழ் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் இந்த கல்வி சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ பின்பற்றிய கொள்கைகளை உள்ளடக்கியதாகும்.
கல்வி முறையை நவீனமயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் என்ற கருப்பொருள்களுடன் இந்த சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றின் மூலம், மாணவர்கள் தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நோக்கிச் செலுத்தப்படுவதாக சங்கம் கூறுகிறது.

இது நாட்டின் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த கல்வி மறுசீரமைப்பு திட்டங்களில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க... போட்டோஸ் Cineulagam