ரணில் மீது ஜனநாயக போராளிகள் கட்சியினர் கொண்டுள்ள நம்பிக்கை
இனங்களுக்கிடையே புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை தீர்ப்பதற்கான நெறிமுறைகளை கையாள்வீர்கள் என்று நம்புகிறோம் என புதிய ஜனாதிபதிக்கான வாழ்த்து செய்தியில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ள நிலையில், புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக ஜனநாயக போராளிகள் கட்சியினரால், ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், உங்களது அரசியல் சாணக்கியமும் அரசியல் முதிர்ச்சியுமே இன்றைய வெற்றிக்கு காரணமாகிறது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். அதற்கு எமது வாழ்துக்களை எங்களது மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
முன்வைத்த கோரிக்கை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், மக்களின் அன்றாட வாழ்வியல் சுமைகள், அரசியல் ஸ்திரமற்ற நிலைகளில் இருந்து இலங்கை விரைந்து மீண்டு வர செயலாற்றுவீர்கள் என திடமாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
