மருத்துவ பீடங்களிற்கு இடையிலான உடற்கூற்றியல் வினாடி வினா போட்டி
இலங்கை உடற்கூற்றியல் சமூகத்தின் வருடாந்த அமர்வின் ஒரு
பகுதியாக உடற்கூற்றியல் வினாடி வினா போட்டியானது இரண்டாவது முறையாக
இவ்வருடமும்
நடைபெற்றுள்ளது.
இரு பகுதிகளாக நடைபெற்ற இப்போட்டியில் பத்து அணிகள் பங்குபற்றி இருந்ததுடன் முதல் பகுதி முடிவில் மூன்று சிறந்த அணிகளாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை சேர்ந்த மருத்துவ பீட அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
மேற்படி, மூன்று அணிகளிற்கும் இடையிலான இறுதி சுற்று போட்டியானது கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இறுதி சுற்று போட்டி
இதன்முடிவில், கொழும்பு மருத்துவ பீட அணி முதலாம் இடத்தையும் யாழ் மருத்துவ பீட அணி இரண்டாம் இடத்தையும் பேராதனை மருத்துவ பீட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
யாழ் மருத்துவ பீட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விநாயகமூர்த்தி திவாகரன், சிறிஸ்கந்தராஜா லக்சன், அஸ்லாம் பாத்திமா ஹம்தா மற்றும் யுதாரா ரண்லினி ரணசிங்க ஆகியோர் போட்டியிட்டனர்.
மேற்படி, மாணவர்களுக்கான தகுந்த ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களான சிவநந்தினி உதயகுமார், துரைரட்ணம் செந்தூரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் யாழ் மருத்துவ பீட உடற்கூற்றியல் துறை வளவாளர்கள் வழங்கியுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |