முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய கட்டடம் தீவிர கண்காணிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் அமைப்பான முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கான புதிய அலுவலகம் இன்று முல்லைத்தீவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய கட்டடத்தை சூழ இராணுவப் புலனாய்வாளர்கள், சிவில் உடை தரித்த பொலிஸார் நேற்றைய தினம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அவர்கள் இன்றைய தினத்திற்கான நிகழ்வு தொடர்பாகவும், நிகழ்வில் பங்கேற்கவுள்ளவர்கள் தொடர்பாகவம் விசாரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையமானது இன்றைய தினம் மாவட்ட ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலனின் தலைமையில் திறந்து வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam