அரசாங்கத்திற்குள் அடிவருடிகளுக்கே இடமளிக்கப்பட்டுள்ளது - சஜித் பிரேமதாச
அரசாங்கத்திற்குள் அடிவருடிகளுக்கே இடமளிக்கப்படுவதாகவும் புத்திஜீவிகளுக்கு தற்போது இடமில்லை எனவும் அந்த இடம் துதிப்பாடுவோருக்கு கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் விவசாயிகளுக்கு பசளையை இலவசமாக வழங்குவதாக அன்று வாக்குறுதி வழங்கியது. விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்குவது எப்படி இருந்தாலும் விவசாயிகளின் நிலங்களும் தற்போது இல்லாமல் போயுள்ளன.
தரமற்ற உடன்படிக்கைகளை செய்து, தரமற்ற பசளைகளை இறக்குமதி செய்து, அரசாங்கம் விவசாயிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தரிசு நிலைத்தை பயிர் செய்யும் நிலமாக மாற்ற போவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், சௌபாக்கியத்திற்கு பதிலாக அசௌபாக்கியத்தை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிடடுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri