பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கும் அறிவுறுத்தல்
அமைதியான முறையில் ஒன்று கூடும் மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்ற போதிலும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் மக்களுக்காக பொறுமையாக காத்திருக்க முடியாது என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
எனவே அனைவரும் தமது உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொறுப்புடன் செயற்படுங்கள்! சேதம் விளைவிக்காதீர்
அடிப்படை உரிமைகளை அனுபவிக்கையில், அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேவையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அத்தோடு தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம், உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் பிரிவு சேவையாளர்களுக்கு இடையூறு விளைவிக்காது சட்டத்திற்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அனுபவிக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan