உக்ரைன் பயணங்களை தவிர்க்கவும்! சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான மோதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர கெடு விதித்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் அந்நாட்டு மக்களுக்கு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படவில்லை எனவும், ஆனால் சுவிஸ் மக்கள் உடனடியாக உக்ரைனுக்கான சுவிஸ் தூதரகத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
2020ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 210 சுவிஸ் குடிமக்கள் உக்ரைனில் தங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைனில் நிலவும் பதற்றத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் ரஷ்யாவை சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.