ராஜபக்சர்கள் ஒருபோதும் பாதிக்கப்பட போவதில்லை! வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்சர்கள் பாதிக்கப்பட போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு நாட்டிற்கு டொலர் அனுப்புவதை தவிர்த்தால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள்.
இதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள்
இதேவேளை ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக் கொள்ள ஏன் அவதானம் செலுத்தவில்லை என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ரஷ்ய கப்பல்: தயங்கும் இலங்கை |
உக்ரைன் - ரஷ்யா மோதலை தொடர்ந்து பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்முதலை தவிர்த்து வருகின்றன.
எனினும் ஆசிய நாடுகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.