உலக சுகாதார நிறுவனம் சஜித்திற்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
கோவிட் வைரஸை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு (WHO)எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நினைவூட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் வைத்திய கலாநிதி ஒலிவியா நிவேரஸ் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியோ அல்லது அரசாங்கமோ ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் நேற்று நடந்த சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். கோவிட் வைரஸ் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகளை பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.
கோவிட் வைரஸ் தடுப்பூசி இரண்டாவது செலுத்துகையின் பின் 14 நாட்கள் கழித்தே பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் இரண்டாவது குப்பி செலுத்துகைக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது கோவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயற்பட்டது.
இருப்பினும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நிலைமை
கைவிடப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
