எரிபொருள் வரிசைகளில் நிற்போருக்கான விசேட அறிவுறுத்தல்
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு அவசர மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்

”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்”என்று பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மக்கள்
”உயர் குருதியழுத்தம், இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது மருந்து மாத்திரைகளையும் தம் வசம் வைத்திருக்க வேண்டும்.
வாகனங்களின் உள்ளே நீண்ட நேரம் காத்திருப்பதனை தவிர்த்து முடிந்தளவு வெளியில் இருங்கள்”என அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri