மோப்ப நாய்களுடன் சோதனையில் இறங்கிய களுவாஞ்சிகுடி பொலிஸார்
மட்டக்களப்பு - பல்முனை பிரதான வீதியின் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நேற்றிரவு (18.01.2024) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோப்பநாய் உதவியுடன் சோதனை
இதன்போது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளும் மோப்ப நாய்கள் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள் எழுதப்பட்ட ஸ்ரிக்கரிகளும், பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
