கீரிமலை ஜனாதிபதி மாளிகையில் ஆய்வு
கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக, கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்றையதினம்(25.04.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் நடாத்தப்பட்டுள்ளது.
திட்டமிடல்
இந்த விஜயத்தில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









2 வாரமாக இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் F-35B போர் விமானம் - பார்க்கிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
