மாணவர்கள் மத்தியில் தூக்கமின்மை அதிகரிக்கும் அபாயம்
இலங்கையில் 63% மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமை கவலைகளை எழுப்புகிறது என சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே கூறியுள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குறித்த தகவலை வெளியிட்ட அவர், தூக்கம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றும், 16 - 17 வயதுடைய பாடசாலை மாணவர்களில் 8.2%மானோர், 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்க நேரத்தைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் 6.6% மாணவிகளும் 16.4% மாணவர்களும், வாகன விபத்துக் காயங்கள் அல்லது மோட்டார் வாகனங்களால் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களால் பாதிப்பு
அத்துடன், வன்முறை மற்றும் தற்செயலான காயங்களில் 23.8% பேர் உடல் ரீதியான தாக்குதல்களையும், 6.1% பேர் பாலியல் துன்புறுத்தல்களையும், 6.9% பேர் இணைய பாலியல் துன்புறுத்தல்களையும், 34.5% பேர் உடல் ரீதியான சண்டைகளையும் எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

47.9% மாணவர்கள் ஆசிரியர்களால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதோடு கடந்த 12 மாதங்களில் 6.1% மாணவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட நிரப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆண்களிடையே இது அதிக சதவீதமாக பதிவாகியுள்ளது என்றும் சமூக மருத்துவ ஆலோசகர் சிராந்திகா விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri