கச்சதீவு குறித்து மீள்பரீட்சிக்க எதுவுமில்லை : இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு
கச்சதீவு (Kachchatheevu) விவகாரமானது 50 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டு விட்டது. அதனை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, முன்னாள் இந்திய பிரதமர்களாகிய ஜவாஹர்லால் நேரு (Jawaharlal Nehru ) மற்றும் இந்திரா காந்தி (Indira Gandhi ) தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் இலங்கையின் அழுத்தத்தால் கச்சதீவை கைவிட்டதாக பாரதீய ஜனதாக்கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
எனினும், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry), இந்த பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டதாகவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாக இந்திய செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்ளக அரசியல் விவாதம்
மேலும், இந்த விடயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தே தற்போது இந்தியாவில் உள்ளக அரசியல் விவாதம் நடத்தப்படுகிறது.
இதனைத் தவிர, கச்சதீவுக்கு உரிமை கோருவது பற்றி யாரும் பேசவில்லை எனவம் அவர் கூறியுள்ளதாக குறித்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |