பிரபல நட்சத்திர ஹோட்டல் மீதான விசாரணை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் கையளிப்பு
நிகழ்வு அமைப்பாளர் சந்திமால் ஜெயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்த அனுமதித்தமை தொடர்பில் கொழும்பில் உள்ள ஷங்க்ரிலா ஹோட்டல் மீதான விசாரணை,கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பிறந்த நாள் விழாவை நடத்தியதற்காக சண்டிமல் ஜெயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட பலரை கொழும்பு கோட்டை பொலிஸார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிறந்த நாள் விழாவை நடத்த அனுமதித்ததற்காக ஹோட்டலின் நிர்வாகத்திற்கு எதிராக கோட்டை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர் .
அதன்படி, ஹோட்டல் நிர்வாகத்திடம் கோட்டை பொலிஸ் வாக்குமூலத்தை பதிவு
செய்திருந்தது.
இந்த நிலையில் விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஒப்படைக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
