சிறுமியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனிடம் விசாரணை
டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்ற விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட்டிடம், உயிரிழந்த சிறுமி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார், நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸார் பீ அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குற்ற விசாணை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த ரிஷாட் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 நாட்களின் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு மீணடும் அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.