பிரித்தானியாவில் காணாமல்போன வீரர்கள் தொடர்பில் மூவர் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு விசாரணை
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்ற 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் போது இலங்கை ஆண்கள் பீச் கரப்பந்து அணியில் இருந்து இருவர் காணாமல்போனமை குறித்து விசாரணை நடத்த இலங்கை கரப்பந்து சம்மேளனம் (SLVB) மூவர் அடங்கிய ஒழுக்காற்றுக் குழுவை நியமித்துள்ளது.
ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி (தலைவர்), பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா மற்றும் போட்டிக் குழுவின் செயலாளர் தனபால ஜயபத்ம ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய ஒழுக்காற்றுக் குழுவே விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளில் தோல்வி
அஷான் ரஷ்மிகா மற்றும் மலிந்த யாப்பா ஆகியோரைக் கொண்ட இலங்கை ஆடவர் பீச் கரப்பந்து அணி, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து காணாமல் போனது.
காணாமல்போன இரண்டு வீரர்களும் இலங்கை விமானப் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும்
அவர்கள் காணாமல்போனது குறித்து, கரப்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக
விமானப்படைத் தளபதிக்கு அறிவித்துள்ளது.