ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை
ஒலிம்பிக் போட்டிகளைக் காண ராஜாங்க அமைச்சர்கள் தெனுக விதானகமகே, டி.வி.சானக மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இன்றைய வாராந்த அமைச்சரவை செய்தி மாநாட்டில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த ஊடக அமைச்சர்,
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் மூன்று ராஜாங்க அமைச்சர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்தமை மற்றும் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசியக் கொடியைக் காட்டத்தவறியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
அரசாங்க செலவினங்களை முடிந்த வரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நேரத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்ந்து மூன்று ராஜாங்க அமைச்சர்கள், ஜப்பான் சென்றமை குறித்தே செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு தெரிந்தவரை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையிலேயே சென்றுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயைக்கூட செலவிடவில்லை. எவ்வாறாயினும், உண்மையை வெளிப்படுத்த ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam