நாடாளுமன்றை அண்மித்த பகுதிகளில் ஆயுதங்களுடன் வந்த படையினர் குறித்து வெளியான தகவல் (Video)
நாடாளுமன்றை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் பதிவு செய்யப்படாத மோட்டார்சைக்கிள்களில் சஞ்சரித்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை அண்மித்த பகுதியில் இவ்வாறான நான்கு மோட்டார்சைக்கிள்களில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகத்தை முழுமையாக மூடி ஆயுதங்களுடன் இலக்கத் தகடற்ற மோட்டார்சைக்கிள்களில் இந்த படைவீரர்கள் சஞ்சரித்தனர். இதன்போது குறித்த படையினரை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்து விசாரணை செய்தனர்.
இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இவ்வாறான பின்னணியில் குறித்த படையினரை வழிமறித்து விசாரணை செய்த பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபரிடம் அதிகாரபூர்வமாக கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி...
இலங்கையில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல்