1000 ரூபா சம்பள பிரச்சினை குறித்து விசாரணை: அமைச்சர் பிறப்பித்துள்ள பணிப்புரை

Salary Inquiry Commission Nimal Siripala de Silva thousand Rupees
By Thirumal Dec 19, 2021 08:35 AM GMT
Report

1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva ) , தொழில் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா லபுக்கலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை நிகழ்வொன்றில் நேற்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

'கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளப்படாமைக்கு தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளனமும் உடன்படவில்லை. அதற்கான பொறுப்பை அந்த இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1000 ரூபா சம்பள உயர்வை வழங்க நீதிமன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்படவில்லை. அதனால் அந்த உத்தரவை செயற்படுத்த முதலாளிமார் சம்மேளனம் கட்டுப்பட்டுள்ளது. அதற்கமைய 90 வீதமான தோட்டங்களில் 1000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் சில தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளை தொழிலாளர்கள் சந்தித்து வருவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதாவது 1000 ரூபாவை பெற வேண்டுமானால் இவ்வளவு கிலோ கொழுந்தை பறிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

எனவே தொடரும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் தற்போது புள்ளி விபரங்களை சேகரித்து வருகின்றோம். ஆகவே 1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தொழில் ஆணையாளரை கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அதனூடாக தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்பார்த்துள்ளோம். அதனூடாக தேவைப்படின் விசேட சட்டமூலம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிர்பார்க்கின்றோர்.

அந்த சட்டமூலத்தின் ஊடாக 1000 ரூபா சம்பள உயர்வையும் அதனை முதலாளிமார் சம்மேளனம் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ந்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கின்றோம். அவை நீதிமன்ற தீர்ப்பிற்கமையவே செயற்படுத்தப்படும்.

தற்போது தேயிலைத் தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. அதேபோல் பெருந்தோட்ட பொருளாதாரத்தை சக்திமயப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நாம் புதியதொரு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளோம்.

அதாவது தரிசு நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையிலான சட்டமூலம். அதற்கமைய தேயிலை, இறப்பர் உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவற்றை அபிவிருத்தி செய்ய மேலும் 6 மாதகால அவகாசம் வழங்கப்படும்.

அப்படியும் அவற்றை அபிவிருத்தி செய்ய தவறினால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்ய கூடிய இயலுமை உள்ளவர்களுக்கு வழங்கும். அதாவது பெருந்தோட்ட மக்களுக்கு மாடு வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்ய அது வழங்கப்படும். அதாவது அந்த காணி சொந்தமாக வழங்கப்படாது மாறாக அதன் பலனை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US