கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பேரவைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள அநீதி
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பேரவையின் அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய வெளிவாரிப் அங்கத்தவர்களின் பெயர்ப் பட்டியல் அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய பேரவைக்கான பட்டியல்
இந்த புதிய பேரவைக்கான பட்டியல் ஒரு தமிழ்ப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கானதாக இருந்தும் தமிழர்கள் மூன்று பெயர்கள் மாத்திரம் அப் பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் முஸ்லிம்கள் ஐந்து பெயரும், சிங்களவர்கள் நான்கு பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாகத் நிந்தவூரைச் சேர்ந்தவரின் பெயர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்பட்டு ஆனால் அவரை ஏற்கத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறுத்துவிட்ட காரணத்தினால் அவரையும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பேரவையின் அங்கத்தவர்களின் பெயர்ப் பட்டியலில் இறுதியாகச் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்கள் விசனம்
இதேவேளை சிங்கள இனத்தவரான வைத்தியர் ஒருவர் நான்காவது தடவையாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். ஆனால் அவ்வைத்தியர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவையின் புதிய அங்கத்தவர்களில் (இரண்டு பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது) ஒரேயொரு தமிழர் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்த் தமிழ் அரசியல்வாதிகள் (இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்) இந்த விடயத்தில் அசமந்தப் போக்காக இருப்பதும், உபவேந்தர் இவ்விடயத்தில் கவனமெடுக்காததும்தான் காரணமென பல்கலைக்கழக ஊழியர்களும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
