யாழ்.இளைஞன் மீது பொலிஸாரின் கொடூர தாக்குதல்:விசாரணைகள் ஆரம்பம்
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் இளைஞரொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து அவரது வாக்குமூலம் நேற்று(01.02.2024) எம்மால் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் அனுமதி
இதேவேளை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம்
தொடர்பில் நீதிமன்ற கட்டளையின் பேரில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்றுவந்த நபரது வாக்குமூலம் எம்மால் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று
பதிவுசெய்யப்பட்டது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
