முல்லைத்தீவில் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை(04) மேசன் வேலைக்காக உயிலங்குளம் வீதி ஊடாக தென்னியங்குளம் நோக்கி வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது உயிலங்குளம் பகுதியிலுள்ள வயல் வெளிக்கு அருகாமையில் வாகனத்தின் சில் ஒன்றில் காற்று போனமையால் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, வாகனத்தில் வேலையாட்கள் நான்குபேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த விபத்தில் கொல்லவிளாங்குளம் வவுனிக்குளத்தினை சேர்ந்த 48 வயதுடைய சின்னத்துரை வாஸ்கரன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் நேற்று முன் தினம்(07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        