‘‘காயப்பட்டார் விடுதலைப்புலிகளின் தலைவர்! தனிமைப்படுத்தப்பட்டது யாருக்கும் தெரியாது’’ (VIDEO)
வல்வெட்டித்துறை - நெற்குழு விளையாட்டு மைதானத்துக்கு அருகில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த போது அவை இரவில் வெடித்து சிதறி அவர் காயப்பட்டதும், அவர் தனிமைப்படுத்தப்பட்டதும் இதுவரை யாருக்கும் தெரியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Sivajilingam) தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலை புலிகள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவது தவறானது.பின்னர் அவர்களிடையே மோதல் வெடித்தது என்பது வரலாறாகும்.
அதேப்போன்று ஜே.ஆர்,ஜெயவர்தனவின் கபட நாடகத்தினையும், இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், இந்தியா தடுத்திருந்தால் தியாக தீபம் திலீபன் போன்ற பல வீரர்கள் பலியாகியிருக்கமாட்டார்கள்.பதற்றமும் ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri