கொழும்பில் பதிவான பாரிய தீ விபத்து: காயமடைந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு
கொழும்பு - புறக்கோட்டை, 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையிலேயே காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சிக்கிய வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam