பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 22 பேர் படுகாயம்
பாகிஸ்தானில், வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டுக்களை நடத்தி வரவேற்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கராச்சி மாநகரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தாண்டின் வருகையை அறிவிக்க கடிகாரம் நள்ளிரவைத் தொட்டபோது, துறைமுக நகரத்தில் பலத்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் எதிரொலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை காட்சிப்படுத்த தடை
பாகிஸ்தான் தொலைக்காட்சி நெட்வொர்க் ஜியோ டிவியின் தகவல்படி, கராச்சியின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தும் வான்வழி துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் மற்றும் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த எட்டு பேர் பொது மருத்துவமனையிலும், நான்கு பேர் ஜின்னா மருத்துவமனையிலும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பத்து பேர் அப்பாசி ஷாஹீத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனைகளின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கோரங்கி நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆண்டைக் கொண்டாடுவதற்காக கராச்சியின் மக்களும் வீதிகளில் இறங்கியதாக பாகிஸ்தானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரியும் பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்தும் இதேபோன்ற கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கொண்டாட்டங்கள் பாகிஸ்தானில் சர்ச்சைக்குரியவை
துப்பாக்கிச் சூடு காரணமாக காயங்கள் ஏற்பட்ட சம்பவங்கள் லாகூரிலும் பதிவாகியுள்ளன, ஆனால் அது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாகிஸ்தானில் சர்ச்சைக்குரியவையாக பார்க்கப்படுகின்றன.
மதகுருமார்கள் களியாட்டங்களை இழிவாகப் பார்க்கிறார்கள் மற்றும் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவதை பாவமாக கருதுகின்றனர்.
இருப்பினும், ஆண்டுதோறும் இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக தெருக்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இந்த கொண்டாட்டங்களுக்கு வலதுசாரி ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆர்வலர்கள்
எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
எனினும் தற்போது அவர்கள் இந்த விடயத்தில் தலையிடுவதில்லை.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
