இனியபாரதி விவகாரத்தில் சிக்கப் போகும் ரோசி டீச்சர் - வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய பொலிஸ் அருண்
இனிய பாரதி விவகாரத்தில் தொடர்ந்து பல முக்கிய தகவல்களும் முக்கிய நபர்களின் சாட்சியங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இனிய பாரதிக்கு மிக நெருங்கிய சகாக்களாக இருந்தவர்களும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
கல்முனை பகுதியில் சிம் அட்டை முகவர்களாகவும் பல மோசடிகளுடன் தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய முக்கிய சாட்சிகளின் அடிப்படையில் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட இனியபாரதியின் விவகாரத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



