கிளிநொச்சியில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பமானது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 9 மணி முதல் இணைமடு சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி. ரணசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களிற்கு ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்றும், நாளையும் குறித்த வைத்தியசாலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்பட்டு அவர்களிற்கான தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
