மாந்தை மேற்கில் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை
மாந்தை மேற்கு - ஈச்சிலவக்கை கிராம உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம், அடம்பன், ஈச்சிலவக்கை ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நேற்று(06.02.2025) கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள ஈச்சலவக்கை கிராமம் மிகுந்த பின் தங்கிய கிராமமாக உள்ளது. அந்தக் கிராமத்தில் பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
துரித நடவடிக்கை
அதனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மூன்று கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு செய்துள்ளோம். அதில் ஈச்சிலவக்கை கிராமமும் தெரிவு செய்யப்பட்டுளளது.

இதன்போது குடிநீர், பாதைகள், பாடசாலை, முன்பள்ளி, ஆலயங்கள் போன்ற அனைத்து இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்குரிய செயற்திட்ட முன்மொழிவுகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதற்கான நிதியை விடுவித்து இந்த வருடத்திற்குள்ளேயே இந்த கிராமத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு முடிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan