வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் குறித்து வெளியான தகவல்
வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று(13) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தேவை கருதிய இடமாற்றங்கள்
ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும் எனவும், அனுமதியற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடமாற்றச் சபையில் இடம்பெற்றிருந்தால் அதனூடாக வழங்கப்படும் இடமாற்றம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கை இன்னமும் வினைத்திறனாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆசிரிய சேவைச் சங்கத்தினர், சேவையின் தேவை கருதிய இடமாற்றங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்படும்போது அது தொடர்பில் 14 நாட்களுக்குள் இடமாற்றச் சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இடமாற்றங்களின்போது அரசியல் தலையீடுகளுக்கு அனுமதியளிக்கவேண்டாம் எனக் கோரிக்கை விடுத்த ஆசிரியர் சேவைச் சங்கத்தினர் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பாடசாலைக்கான அனுமதிகளில்
மேலும் ஆசிரியர்களால், அதிபர்களால் திணைக்களங்களில் ஒப்படைக்கப்படுகின்ற ஆவணங்களுக்கு பெற்றுக்கொண்டமைக்கான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கப்படவேண்டும் என முன்வைத்த கோரிக்கையை செயற்படுத்துவதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.
அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டு அதனைப்பொறுப்பேற்காதவர்கள் தொடர்பான விடயமும், அதிபர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அதனை நிரப்பும் வகையில் அவர்களை உள்வாங்குமாறும் அதிபர் சேவைச் சங்கப் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதிபர்கள் இடமாற்றக் கொள்கை தயாரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலைக்கான அனுமதிகளில் சில இடங்களில் பாரபட்சம் காட்டப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறானதொரு விடயத்துக்கு தயவுதாட்சணயமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கோரினார்.
அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
