கொழும்பு மக்களுக்கு குறுந்தகவலில் அனுப்பப்படும் தகவல்
கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கு கொவிட் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் முறை தொடர்பில் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் தொற்று நோய் பிரிவு விசேட வைத்தியவர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
அந்த குறுந்தகவலில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் தினம், நேரம் மற்றும் இடம் தொடர்பில் உரிய நபருக்கு அறிவிக்கப்படும். அத்துடன் அந்த நபருக்கு முதலாம் தடுப்பூசியின் போது வழங்கப்பட்ட அட்டையை கட்டாயம் குறிக்கப்பட்ட தினத்தன்று கொண்டு வர வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அட்டை காணாமல் போயிருந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து முறைப்பாட்டின் பிரதியை ஒப்படைத்து இரண்டாவது தடுப்பூசியை பெற வர வேண்டும்.
கொழும்பு நகர சபை எல்லைக்குள் 88000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசி எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam