பதியூதினின் வீட்டில் சித்திரவதைக்குள்ளான மற்றுமொரு பெண் வெளிப்படுத்திய தகவல் - சிங்கள ஊடகம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதியின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவை செய்யும் போது, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுமி பொலிஸ் விசாரணையின் போது கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏனைய 11 பெண்களில் ஒரு சிறுமியே இவ்வாறு பொலிஸாரிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்.
சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டுகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு நீரை முகத்தில் வீசுவார் என பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதினின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணிப் பெண்கள் அனைவரையும் இந்த முறையில் சித்திரவதைக்குட்படுத்தி மோசமான முறையில் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் துடைப்பக் கட்டை உடையும் வரை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த அறையில் இருந்து சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை பொலிஸார் இதுவரையில் கண்டுபிடித்துள்ளனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
