பொரளை கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளியான தகவல் (VIDEO)
பொரளை மருதானை வீதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பெறுமதியான பல தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றமை தொடர்பில் விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த கொள்ளை சம்பவத்தின் போது நகைகளை கொள்வனவு செய்ய வந்த வாடிக்கையாளரிடம் இருந்தும் நகைகள் திருடப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட 05 பெட்டிகளுடன் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பொரளை கொள்ளைச் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு
கொழும்பில் நடந்த துப்பாக்கிச் சூடு : நகைக்கடையில் ஏற்பட்ட பதற்றம்
