கோவிட் சுகாதார அட்டை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் சுகாதார அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போறைய நிலைமையை அமைய நான்காவது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால், சுகாதார அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
