மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் செலுத்துகை தொடர்பில் புதிய ஆய்வில் வெளியான தகவல்
கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர் )செலுத்துவதற்கான அவசரத்தேவை இல்லை என புதிய ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் வெளியிட்ட தொழில்நுட்ப அறிக்கை ஒன்றில், பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மையை கொண்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளின் ஒரு பகுதியாக, கூடுதல் அளவுகள் கருதப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செலுத்தப்பட்டு வரும், தடுப்பூசிகளின் செயல்திறன், கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக மிகவும் பாதுகாப்பைக் காட்டுகின்றன.
அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடுமையான பாதிப்புகளை குறைக்க, தடுப்பூசி முயற்சிகளை நிறைவு செய்யும் அதேநேரம் உடல் இடைவெளி, கைகளை கழுவுதல் மற்றும் சுவாச சுகாதாரம், தேவைப்படும் இடங்களில் முகக்கவசங்களை பயன்படுத்துதல் முக்கியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



