13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்-அரசியல் பார்வை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
குறித்த சட்டத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
13 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்பிற்கமையவே செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல அரசியல் செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய அரசியல் பார்வை நிகழ்ச்சி,
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri