குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப்பிணையாளர்கள் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு
போலி கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, ஒரு சந்தேகநபர் 10 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும், மற்றுமொரு சந்தேகநபர் 07 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தி, அந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதாக முன்னிலையான இரண்டு போலி பிணையாளர்களையும், அவர்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் நபரையும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த வாழைத்தோட்ட பொலிஸ், முதல் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கிராம சேவைச் சான்றிதழ்களை வழங்கிய கிராம அலுவலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிடியாணையின் பின்னணி
அதன்படி, முதல் மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள் சில காலமாக இந்த முறையில் பிணை பெற்று வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் சந்தேகநபரான கபில சந்திரசேனவின் உறவினர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில், கபில சந்திரசேன தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கும் நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 48 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல், அறிகுறிகள் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam