உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos)

Election Commission of Sri Lanka Jaffna Sri Lankan Peoples
By Theepan Sep 20, 2022 03:19 PM GMT
Report

நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றோம் என இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாமதத்திற்கான காரணம்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos) | Information Released Local Council Elections

மேலும் தெரிவிக்கையில், செப்டெம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட முடியும். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos) | Information Released Local Council Elections

உள்ளூராட்சி சபைக்கு பொறுப்பான அமைச்சர் 2023 மார்ச் 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிக்க செய்திருக்கின்றார். உள்ளூராட்சி சபை சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது உள்ளூராட்சி சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முந்திய நாளிலிருந்து தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகின்றது.

தேர்தலுக்கான பிரகடனம்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos) | Information Released Local Council Elections

தேர்தலுக்கான பிரகடனத்தை வெளியிடும் போது எந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு நடைமுறையில் இருக்கிறதோ, அந்த வாக்காளர் இடாப்பையோ பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பை பயன்படுத்தி செப்டெம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட முடியும். ஆனால் அவ்வாறு செய்தால் 18 வயதைக் கடந்த 350,000 புதிய வாக்காளர்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியாது.

அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 350,000 வரையானோர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டு நவம்பர் மாதம் அதனை அத்தாட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதன்பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் மார்ச் 20 க்கு முன்னதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவோம்.”என கூறியுள்ளார்.

யாழில் கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos) | Information Released Local Council Elections

யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்று வரும் குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழு திரு சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US