இலங்கையில் மரபணு பரிசோதனையில் மாறுமட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் ஏராளம் என எச்சரிக்கை...
ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடு தொற்றுக்குள்ளான 160 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 160 பேருடன் சேர்த்து இலங்கையில் இதுவரையில் 208 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் சந்திம ஜீவன்தர, “சோதனையிட்ட 182 மாதிரிகளில், 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது.
அதிகமான மரபணு விமான நிலையத்தில் இருந்தே கிடைத்தது. அதிகளவானோர் இலங்கையில் இருந்து வெளியேறியவர்களிடம் இருந்து கிடைத்தது. இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வருகைத்தந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை, கண்டி, கம்பஹா மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே ஒமிக்ரோன் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களாகும்.
இதன் மூலம் ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கையின் முதன்மை மாறுபாடாக மாறி வருவதனை நாங்கள் அவதானிக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan