அதிகரிக்கும் மரணங்கள் - கொழும்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான தகவல்
கொழும்பில் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் தொடர்பில் புதிய கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொண்ட எவரும் கோவிட் தொற்றால் உயிரிழக்கவில்லை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜேமுனி தலைமையிலான குழுவினர் இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த ஜனவரி 1 முதல் பெப்ரவரி 10 வரை கொழும்பில் 33 கோவிட் மரணங்கள் பதிவாகி உள்ளன. அதில் 08 பேர் ஒரு டோஸ் கூட கொவிட் தடுப்பூசியைப் பெறவில்லை என்றும் 22 பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெறவில்லை என்றும் மீதமுள்ள மூன்று பேர் ஒரு டோஸ் மட்டுமே பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள சர்வதேசப் பாடசாலைகளில் 90 வீதமானோர் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். எனினும் அரசாங்கப் பாடசாலைகளில் 50 வீதமானோரே ஆர்வம் காட்டியுள்ளதாக, கணக்கெடுப்பினை முன்னெடுத்த மருத்துவர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.