பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பயன்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பயன்படுத்தப்படுமாயின் முன் அனுமதி பெறப்பட வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிக்கை
இதன்படி, நினைவுச் சின்னங்கள், பலகைகள், மின்னணு மற்றும் அச்சிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிக்கை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேறு நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan