கொழும்பில் பயணப்பைக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில், வீதியிலுள்ள குப்பை மேடு ஒன்றில் பயணப்பைக்குள் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
30 - 40 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த சடலத்தின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் அந்த இடத்தை சோதனையிட்டுள்ளனர். இதன் போது குறித்த பை பச்சை நிறத்திலான பாய் ஒன்றில் சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சடலம் அங்கு வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்துள்ளதால் அதில் வெட்டுக்காயங்கள் உள்ளதா என கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி
பயணப்பையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: கொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பு


