சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியுதவி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியுதவி 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று இலங்கை நம்புகின்றது.
எனினும் அது கடனாளிகளின் ஒத்துழைப்பிலும் உத்தரவாதத்திலும் தங்கியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்காக இலங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Clifford Chance மற்றும் Lazard ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடன் வழங்குநர் மன்றத்திற்கான புதுப்பிப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுக்கடன் பிரச்சினை
அத்துடன் உள்நாட்டுக் கடன் பிரச்சினை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் நிலையில், கிளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லாசார்ட் ஆகியோரின் உதவியுடன் இந்த கடன் நடைமுறை இன்னும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சீர்திருத்தம் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை இல்லை என்று குறிப்பிட்ட ஆளுநர், ஊழல் பாதிப்புகள் மற்றும் நடுத்தர நீண்ட கால வளர்ச்சி சீர்திருத்தங்களை நிவர்த்தி செய்யும் இரண்டு முக்கிய கோரிக்கைகளையே சர்வதேச நிதியம் முன்வைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர்,
இலங்கை, இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற
வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
