தீவிரமான டெல்டா வைரஸ் திரிபு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
கோவிட்19 வைரஸ் தொற்றின் தீவிரமான திரிபுகளில் ஒன்றான டெல்டா திரிபிற்கு உட்பட்டவர்களின் தொடர்பாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரிபினால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பாளர்களுக்கு இதுவரையில் நோய்த்தொற்று ஏற்பட்டதாக அவதானிக்கப்படவில்லை என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று திரிபினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் வேகமாக இந்த வைரஸ் தொற்று பரவும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வைரஸ் தொற்றின் திரிபுகளை கண்டறிவதற்கான ஆய்வு கூட வசதிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
