ஒமிக்ரோன் வைரஸின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
ஒமிக்ரோன் வைரஸ் டெல்டா வைரசை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகின்றமை குறித்து பல நாடுகள் அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில்,2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து டெல்டா, பீட்டா, காமா என பல்வேறு வகைகளில் வைரஸாக உருமாற்றமடைந்துள்ளது.
இதற்கிடையில், தற்போது மேலும் உருமாற்றமடைந்துள்ள‘ஒமிக்ரோன்’ வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதும் நிலையில்,ஒமிக்ரோன் வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறுகையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் சுலபமாக பரவலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமிக்ரோன் பரவலாம். ஆனால், டெல்டா வைரசுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோன் வைரஸ் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதற்கு சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
