அத்தியாவசிய மருந்து வகைகள் குறித்து வெளியான தகவல்
நாட்டின் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்து விட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்து தொடர்பில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தேசிய வைத்தியசாலை முதல் கிராமிய வைத்தியசாலைகள் வரையிலான முழு வைத்தியசாலை அமைப்பின் சுகாதார சேவைகளைப் பராமரிப்பது பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு பொறுப்பு
இதேவேளை, இந்திய கடன் உதவி முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் 80 சத வீதம் மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மருந்து தட்டுப்பாட்டுக்கு ஆணைக்குழு பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 16 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam